Wednesday, October 3, 2012

நல்வரவு!

 நல்வரவு!
முதலில் வலைப்பூ தொடங்கும் காலத்தில் எதர்க்கும் இருக்கட்டும் என்று இரண்டு வலைப்பூவினை தொடங்கினேன்.

காலப்போக்கில் ‘தாமரை மதுரையில் தொடர்ந்து எழுதி வருகிறேன். எனது இந்தத்தளத்தினை [மாதேஸ்வரன் மதுரை] வலை உலகத்தில் அவ்வப்போது அறியப்படும் தொழில் நுட்பத்தினை பரிசோதனை செய்ய உபயோகப்படுத்திவருகிறேன்.
எனவே எனது தாமரைமதுரைக்கு http://thamaraimalar-chandrasekar.blogspot.in/ வருகை புரிந்து தொடர்ந்து தங்களின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி. வணக்கம். அன்புடன்,

Saturday, September 8, 2012

காற்றேதான் கடவுளடா!

காற்றேதான் கடவுளடா!


ஒரு நாளில் ஒரு மனிதர் சுவாசிக்கிற உயிர்காற்று (ஆக்ஸிஜன்) மூன்று பிராணாவாயு சிலிண்டர்களுக்குச் சமமானது. ஒரு பிராணாவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாய், ஒரு நாளுக்கான தேவை 2,100/-ரூபாய். ஓராண்டுக்கான இதன் மதிப்பு ரூ,7,66,55/-



சராசரி ஆயுள் 65 ஆண்டுகளுக்குத் தேவைப்படும் பிராணாவாயுவின் மதிப்பு 5,00,00,000 ரூபாய்! இவ்வளவு மதிப்புமிக்க உயிர்க்காற்று எங்கிருந்து கிடைக்கிறது? 

நம்மைச் சுற்றியுள்ள மரங்களிடமிருந்துதான்! ஓர் அரசமரம், தன்னைச் சுற்றி அரை கிலோ மீட்டர் பரப்பளவு காற்றை தூய்மைப்படுத்தி, பிராண வாயுவை தரும் பணியைச் செய்கிறது! இரனால்தானோ என்னவோ, நம் முன்னோர்கள் இதனை காக்கும் கடவுள் விஷ்ணுவின் அம்சமாகக் கருதினார்கள்.





விருட்ச சாஸ்திர பலன்கள்!
ஓர் அரசு ஆலும் வேம்பும்  
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம்தானே.

-        இப்பாடல் “கார்த்திகை புராணத்தில் இருக்கிறது. ஒவ்வொருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வமரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தால் அவருக்கு நரகம் இல்லையாம். மரங்கள் தரும் பெரும் பயனை இப்பாடல் எளிய முறையில் விளக்குகிறது.
மரங்கள் வைத்து ‘வனமஹோத்ஸவம் கொண்டாட வேண்டியகாலத்தையும் நமது முன்னோர்கள் குறித்திருக்கிறார்கள்.























நம்மில் மிகச் சிலருக்கே மரங்களின் மதிப்பு தெரிகிறது.  எல்லோருக்குமான விழிப்புணர்வு இப்போது வரப்போகிறது…?


மண்ணை நேசிப்போம்-
ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
மரங்களைப் பாதுகாப்போம்-
வளம் பெறுவோம்!

  

Sunday, September 2, 2012

"coment- ல் பல வகைகளை


"coment- ல்  பல வகைகளை  உபயோகப்  படுத்தலாம் .

கீழே  உள்ள  கமெண்ட்  பெட்டியை  பார்க்கவும் !!

நன்றி
1."எதி நீச்சல்"

2." மாய உலகம்"









Monday, August 20, 2012

நடராஜர் சிலையின் சிறப்பு (1):-





நடராஜர் சிலைகள் பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் காணலாம். ஆனால் கீழ்க்கண்டஐந்து கோவில்களிலும் உள்ள நடராஜர் சிலைகள் அனைத்தும் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பெற்றது.
இதன் வரலாறு:- சிங்கவர்மன் என்னும் மன்னன் தனது பாவமும் ரோகமும் தீர தில்லை சிவகங்கை குளத்தினில் மூழ்கியதால் குணமாக நடராஜருக்கு ஒரு சிலை வடிக்க எண்ணி நமச்சிவாய முத்து என்ற
ஸ்தபதியால் தாமிரத்தி வடிக்கப் பட்ட சிலை தில்லை நடராஜர் ஆகும்.சிலையின் அழகில் மயங்கிய மன்னன்,அடுத்த சிலையினை தங்கத்தால் உருவாக்கச்செய்தான்.நடராஜர் திருவிளையாடலால் இது செப்புத்திருமேனியாகியது. இதனை "செப்பறை" என்ற ஸ்த்தலத்தினில் அமைத்தான். மேலும் இரண்டு திருமேனியை செய்யப்பணித்து அதனை "கட்டாரி மங்களம்" மற்றும் "கரிசூழ்ந்த மங்களம்" என்ற ஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்தான்.

இது போல் வேறு திருமேனியை சிற்பி உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் கையை அரசன் துண்டித்துவிடசிற்பியும் அசராது மரத்தால் ஆன கை செய்து அதன் உதவியால் இதேபோல் பிறிதொரு சிலை செய்து ஐந்தாவது சிலையினை "கருவேலங்குளம்என்ற ஸ்தலத்தினில் பிரதிஷ்டை செய்தான்!
மேற்கண்ட ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும்.
சிலையின் சிறப்புமேற்கண்ட  ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜர் சிலைகளில் சிதம்பரம் நடராஜர் மட்டும் வீதிஉலா வருவார்அப்போது சிலையின் முன்னால் இருந்து பார்த்தால் நடராஜர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில் இருப்பார்பின்புறம் இருந்து பார்த்தால் ஒருகால் தூக்கி ஆடுவது தெரியும்.
                                                        கோனேரி ராஜபுரம்  நடராஜர்



http://images.travelpod.com/users/indianature/28.1281538296.nataraja-konerirajapuram.jpg
                      கோனேரி ராஜபுரம்  நடராஜர்
மேற்கண்ட ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜரைத்தவிரகோனேரி ராஜபுரம் (கொதிக்கும் உலோகக்கூழை சிவபெருமான் வயோதிகர் உருவில் வந்துஅதனைக்குடித்து நடராஜராக உருமாறியவர்), மற்றும்நெல்லை கீழ்வேளூர்பாத்தூர் சிவபுரம்ஆகிய ஸ்தலங்களில் உள்ள சிலைகளும் சிற்ப சாத்திரப்படி  உன்னதமாக வடிக்கப்பட்டு இருப்பதை கீழ்க்கண்ட முறையினால் அறியலாம்.
  பெருமானுக்கு  தேன் அபிஷேகம் செய்யும் போதுமுகத்தில் வழிந்து,மூக்குநுனி வழியே கரத்தினில் வீழ்ந்துபின் விரலில் வழிந்துதூக்கிய திருவடியின் மேல் விழுந்துஇடது பாதத்தின் பெருவிரல் வழியே கீழே நூல்பிடித்தால் போல் விழவேண்டும்
சிற்ப சாத்திரப்படி உன்னதமாக அமைந்த உருவம் இதுதான்

                          
                        வானூர் நடராஜர்
  

Sunday, March 18, 2012

தேவி மகிமை


               -தேவி மகாத்மியம்                       




தன லக்ஷ்மி 

       யா தேவீ ஸர்வபூதேஷூ புத்தி ரூபேணே ஸம்ஸ்திதா !
      நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!    



வித்யா லக்ஷ்மி 

                      யா தேவீ ஸர்வபூதேஷூ சக்தி ரூபேணே ஸம்ஸ்தித !
         நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம:!!



தான்ய லக்ஷ்மி 

            யா தேவீ ஸர்வபூதேஷு த்ருஷ்ணாரூபேண ஸம்ஸ்திதா !
     நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!


சௌபாக்ய லக்ஷ்மி 
                                       

         யா தேவீ ஸர்வபூதேஷு சாந்திரூபேணே ஸம்ஸ்திதா !
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!



 வீர லக்ஷ்மி  



  யா தேவீ ஸர்வபூதேஷு ச்ரத்தாரூபேணே ஸம்ஸ்திதா !
  நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

சந்தான லக்ஷ்மி 




   யா தேவீ ஸர்வபூதேஷு லக்ஷ்மீரூபேணே ஸம்ஸ்திதா !
   நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!







    யா தேவீ ஸர்வபூதேஷு ஸ்ம்ருதிரூபேணே ஸம்ஸ்திதா !
    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!


காருண்ய லக்ஷ்மி 
                         


  யா தேவீ ஸர்வபூதேஷு தயாரூபேணே  ஸம்ஸ்திதா 
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!

  
 




 யா தேவீ ஸர்வபூதேஷு மாத்ரூபேணே ஸம்ஸ்திதா !
 நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம: !!



மகா லக்ஷ்மி 





Monday, March 5, 2012

புகழ் பரப்பும் இந்தியச் சிற்பக்கலை




இந்தியச் சிற்பக் கலையின் சிறப்பினை வெளிப்படுத்தும் கலைக்
கோவில்களில்,குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை கர்நாடகத்தின் பேலூர் -- ஹளேபீடு ஆலயங்கள்.

Photos of Belur Temple, Karnataka
   மேல் மண்டப சிற்பம்
 
பேலூரில் ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோவிலும் அங்கிருந்து 10 மைல் தொலைவில் உள்ள ளே பீடு ஸ்தலத்தில் அற்புதமான கோவில் ஸ்ரீ ஹொய்சாலேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்.

 இங்கே அழகு தரிசனம் தரும் சிற்பங்கள்  நம் முன்னோர்களின் கலைச்சிறப்பிற்கும் சான்றாக விளங்குகிறது.

                                                                       


Photos of Belur Temple, Karnataka
                              மண்டபம் மேற்  பகுதியில்

Photos of Belur Temple, Karnataka
                         
                                                  நடன மாது











Photos of Belur Temple, Karnataka

                         ஒரு தூணைப் போல் மற்றொன்று இருக்காது

1.நர்த்தன சரஸ்வதி தூணில் நர்த்தனக் கோலத்தில் அருள்கிறாள் கல்வி நாயகி. நான்கு கைகளைக் கொண்டு நாட்டியமாடும் கலைவாணியை வலப்புற்ம் கோவிலின் பின்புறம் வடக்கு நோக்கி தரிசிக்கலாம்.

 மற்றொரு பகுதியில் 10 கரங்கள் கொண்டவளாக சரஸ்வதி தேவி; தேவி அருகே வாத்தியக் கோஷ்டி,சிரசுக்கு மேல மரக்கிளைகள் மற்றும் படர்ந்துள்ள கொடிகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது..




Photos of Belur Temple, Karnataka

                                                                      கஜசம்ஹாரம்


வேழம் உரிக்கும் சிவன்: ஹொய்சாலேஸ்வரர் கோவிலை வலம் வரும் போது, தெற்கு வாசலைத்தாண்டியதும் சிவனின் ஒரு உக்கரத்தாண்டவத்தினைக் காணலாம். யானை உருவில் வரும் அசுரனைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்தியவண்ணம் ஆடும் தாண்டவத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
சிவனாரின் கைகளில் உடுக்கை,சூலம்,குறுவாள், அசுரனின் சிரம் ஆகியவற்றை ஏந்தி ஆடுகிறார். ஸ்வாமியின் கைவிரல் நகங்கள் யானைத்தோலை உரித்தெடுக்கும் அளவு கூர்மையாக இருப்பதை ஊன்றி கவனியுங்கள்.




Photos of Belur Temple, Karnataka
                                                           தூண்கள்
2.  படைப்புக் கடவுள் ப்ரம்மன்.அவர் கலடியில் வெண் சாமரம் வீசும் மங்கைகள்.பீடத்தில் அன்னப்பறவைகள். ஒரு    அற்புதமான சிற்பத் தொகுப்பு



Photos of Belur Temple, Karnataka

                                                                          பிரம்மா


Photos of Belur Temple, Karnataka



             
                                                              நரசிம்ஹ அவதாரம்





    ஸ்ரீ கிரிஷ்ணர் கொவர்த்தன கிரியை ஒரு விரலில் தூக்கும் அற்புத காட்சி.








     சிவபெருமான் பிஷ்ஷாடனராக தோற்றம் அளிக்கும் அழகிய சிற்பம்.




                     கருடன் மேல் வீற்றிருக்கும் விஷ்ணு





                       அபிமன்யுவின் சக்கரவியூகம்







                                                    கோவிலின் தென்பகுதி 


வேழம் உரிக்கும் சிவன்: ஹொய்சாலேஸ்வரர் கோவிலை வலம் வரும் போது, தெற்கு வாசலைத்தாண்டியதும் சிவனின் ஒரு உக்கரத்தாண்டவத்தினைக் காணலாம். யானை உருவில் வரும் அசுரனைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்தியவண்ணம் ஆடும் தாண்டவத்தைக் காணக் கண் கோடி வேண்டும்
சிவனாரின் கைகளில் உடுக்கை,சூலம்,குறுவாள், அசுரனின் சிரம் ஆகியவற்றை ஏந்தி ஆடுகிறார். ஸ்வாமியின் கைவிரல் நகங்கள் யானைத்தோலை உரித்தெடுக்கும் அளவு கூர்மையாக இருப்பதை ஊன்றி கவனியுங்கள்.



                    ஆலயத்தின் முகப்பில் வினாயகர்.








                                        ஹோய்சால மன்னர்களின் இலச்சினை   


     
                                                    விஷ்ணுவின் காலடியில் லஷ்மி 



              அழகி காலில் தைத்த முள்ளினை எடுக்கும் காட்சி



           கோவிலின் உட்பகுதியில் உள்ள அழகிய மண்டபம்





                     மோகினியின் அழகு  கொஞ்சும் சிலை.




                              ராகு கேது சிற்பம்





நரசிம்ம அவதாரம் அரக்கனின் குடலை மாலையாக போட்டிருப்பதைக் காணலாம்




                      சிவபார்வதியின் அழகிய சிற்பம்







                                                                       கல் கதவு 





                            வலம்புரி வினாயகர்.



 வாமனன் மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பம். அழகிய வாமனனுக்கு           அசுரச்சக்கரவர்த்தி மஹாபலி தாரைவார்த்துக் கொடுக்கிறார்.



                            வராக அவதாரம்



      மண்டபத்தின் உள்ளே அழகிய விஷ்ணுவின் அழகிய தோற்றம்






                 கருடன் மேல் வீற்றிருக்கும் விஷ்ணு




                              மண்டபத்தின் உள் விஷ்ணுவின் அழகிய சிலை 



இந்திரனின் போர்க்கோலம் [கிருஷ்ணர் கருடன் மேல் அமர்ந்து,இந்திரலோகத்தில் உள்ள  பாரிஜாத மரத்தினையும் பாமாவையும்கவர்ந்து  செல்லும் போது இந்திரன் தடுத்து போர் புரிகிறார்.


               கோவில் மண்டபத்தில் உள்ள கவின் மிகு சிற்ப அற்புதங்கள் 













back to top