Friday, December 30, 2011

நடராஜர் (தொடர்ச்சி) அஷ்ட வீரட்டத்தலங்கள்

சிவ பெருமான் வீரச்செயல்கள் புரிந்த ஸ்தலங்கள் வருமாறு:
1.திருக்கண்டியூர்   -- ----  பிரம்மன் சிரம் கொய்தது.
2.திருக்கோவலூர்  -- --- அந்தகாசுரனை அழித்தது.
3.திருவதிகை          -- ---  திருபுரத்தை எரித்தது.
4.திருப்பறியலூர்  -- ---  தக்கன் சிரம் கொய்தது.
5.திருவிற்குடி       -- ----  ஜலந்தரனை அழித்தது.
6.திருவழுமூர்.      -- ----  யானையை உரித்தது.
7.திருக்குறுக்கை.-- --- காமனை எரித்தது.
8.திருக்கடவூர்.    -- ---- யமனை உதைத்தது
Tuesday, November 8, 2011

பின்னூட்டதில் போட்ட படங்கள்!


வலைப்பதிவின் புதிய ஆரம்ப பதிவாளரான எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த பல வலைபதிவாளர்களுக்கு எனது பணிவான நன்றி!

குறிப்பாக,
                       http://thulasidhalam.blogspot.com/
                       
                       http://maayaulagam-4u.blogspot.com/

                       http://jaghamani.blogspot.com/

                         http://ethirneechal.blogspot.com/

                     http://bloggernanban.blogspot.com/p/table-of-contents_22.html

ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

Wednesday, November 2, 2011

மாப்பிள்ளை சொதி!


இது ஒரு உணவு வகை ஆகும். என்ன இது புதுமை என்கிறீர்களா! ஒன்றுமில்லை, எனது ம்ற்றொரு வலைப்பதிவான "தாமரை மதுரையில்" வெளியிட்டுள்ள "பொதிகை--பல் போச்சே" கட்டுரையில் வெளி உலகத்தொடர்பில்லாமல் 3 தினங்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? உடன் வந்த சமையல்காரர் புண்ணியத்தால் அறுசுவை உணவுக்கு குறைவில்லை

ஒரு நாள் உணவில் இந்த மாப்பிள்ளை சொதி கட்டாயம் இடம் பெறும்.


மாப்பிள்ளை சொதி செய்யும் முறை:-- தேவையான பொருட்கள்: 1. தேங்காய்-2. 2.சிறு பருப்பு (பாசிப் பருப்பு)-300 GM. 3.உருளை கிழங்ககு, கேரட், பீன்ஸ் , முருங்காய், சி.வெங்காயம் தலா ஒரு கப், பட்டை,லவங்கம், பூண்டுசோம்பு அகியவை சிறிதளவு, இஞ்சி சாறு, எலிமிச்சை சாறு ஒரு டேபில் ஸ்பூன், பச்சை மிளகாய் 8-10, நெய் மற்றும் உப்பு. தேவையான அளவு.
மாப்பிள்ளை சொதி தயாரிக்கும் முறை:

முதலில் பாசிப்பருப்பை வேகவைக்கவும். தேங்காயினை உடைத்து துருவி மிக்சியில் இட்டு அரைத்து பால் எடுக்கவும். இது மிக வும் திக்காக இருக்கும்.பின் திரும்பவும் சிறிது நீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும் . மீண்டும் நீர் சேர்த்து மூன்றாவது பால் எடுக்கவும். எடுத்த மூன்று பால்களையும் தனித்தனியாக பாத்திரத்தில் வைக்கவும். காய்களை நீளவாக்கில் சற்று பெரிய துண்டுகளாக வறுக்கவும். மிளகாயினை நீளமாக கீறி வைக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு, பட்டை, சோம்பு, லவங்கம் போட்டு சிவந்ததும் நறுக்கிய காய்களை போட்டு நன்கு
வதக்கவும்தேவைஆன அளவு உப்பினை சேர்க்கவும்.பின் மூன்றாவது தேங்காய் பால் விட்டு நன்றாக வேகவிடவும். வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் இரண்டாவது எடுத்த பால் சேர்த்து லேசாக கொதிக்கவிடவும். அதிகசூட்டில் கொதிக்க வைத்தால் தேங்காய் பால் திரிந்துவிடும். மேல்கொண்டு இஞ்சி சாறினை சேர்க்கவும். பின் முதல் பாலினை சேர்த்து, எலுமிச்சை சாறினை சேர்க்கவும். உடன் அடுப்பில் இருந்து இறக்கவும். தேவையானால் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
இது தான் "மாப்பிள்ளை சொதி". நெல்லை சீமையில் இது மிகவும் பிரசித்தம். புது மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு வரும் போது இதனை கட்டாயம் செய்வதால் "மாப்பிள்ளை சொதி" என்று பெயர். தவறினால், 'என்ன வே ஒரு சொதி செய்து போடலேஎன கேலிப்பேச்சுக்கு ஆளாக நேரிடும்.
அன்புடன்,

Friday, October 21, 2011

"தீபாவளி வாழ்த்துக்கள்"


 
                      அனைவருக்கும் அன்புகலந்த "தீப ஒளி" வாழ்த்துக்கள்.  மைகேல் ஜாக்சன் "சந்திரமுகியில்"  
மைகேல் ஜாக்சன் {"என்னடி முனியம்மா "}

Wednesday, October 19, 2011

தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி எழுதிட                   திருப்பட்டூர்  

பிரம்மன் உலகை படைககும் சக்தி தன்னிடம் உள்ளது எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காதபோது ஈஸ்வரன், பிரம்மன் அகங்காரத்தை அழித்ததால் படைப்புத்தொழில் பாதிக்கப்பட்டது. இதனை உணர்ந்த பிரம்மன் 12 துவாதசி லிங்கங்களை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு மீண்டும் படைப்பாற்றலை வழங்கினார்.அதாவது "என்னை மகிழ்வித்த பிரம்மாவாகிய உன்னை வழிபடுபவர்களின் தலையெழுத்தை நீ மங்களகரமாக மாற்றுவாயாக" என்று வரமருளினார்.ஈசன் விதி இருப்பின் கூட்டி அருள்க என்று கூறி இங்குள்ள ப்ரம்மன் பத்மாசனத்தில் (தாமரை) வீற்றிருக்கும் காட்சி மிகவும் பிரமிப்பூட்டுவதாகும்.
தியான நிலையில் பிரம்மன் சுமார் ஆறடி உயரம், ஆறரை அடி சுற்றளவில் தனித்துவமாக காட்சி தருகிறார். இவரை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும்
மன நோயாளிகள், பிள்ளைகள் இழப்பு, துர்மரணம், சொத்து இழப்பு போன்றவைகளுக்கு இவரை தரிசனம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
தோஷங்கள் நீங்க இவரை வணங்கினால் "தலையழுத்தை மங்களகரமாக மாற்றி எழுதக்கூடிய நல் பாக்கியத்தினை விதியிருப்பின் விதிகூட்டி அருள்வார். மிகவும் சக்திவாய்ந்தவர். இத்தல அன்னை அருள்மிகு ஸம்பத்கௌரி. பிரம்மனை வழிபடுபவர்களுக்கு சம்பத், செல்வம் வழங்கி அருள்புரிகிறார்
பிரம்மன் சன்னதிக்கு அருகில் 18 சித்தர்களில் ஒருவரான "பதஞ்சலி" முனிவரின் ஜீவ சமாதி உள்ளது. அப்பர் சுந்தரரால் பாடல் பெற்ற  பெருமை உடையது.இங்கள்ள ப்ரமாண்டமான நந்தியை பார்க்க பரவசத்தினைக் கொடுக்கும்நம்பிக்கையுடன் வழிபட்டால், திருமணத்தடை நிவர்த்தி,புத்திரப்பேறு, மங்களகரமான வாழ்க்கை, சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும்செல்லும் வழி. திருச்சி--பெரம்பலூர் சாலையில் 30கி.மீ. தொலைவில் சிறுகனூர் என்ற சிற்றூர் அருகில் 4கி.மீ. தொலைவில் உள்ளது.░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓▓▓░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░back to top