Friday, July 15, 2011

ஆடியும் அம்மனும்

ஆடி பிறந்தாலே திருவிழாக் கோலம் தான்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்தநன்னாள்.ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் திருவிழா மிகவும் விசேஷம்.

உடன் எழுந்தருளி இருக்கும் காமதேனுவுக்கும் வளையல் மாலை சாற்றி அலங்கரித்திருப்பார்கள்.
ஆடி கடைசி வெள்ளியன்று பெண்களுக்கு அந்த வளையல்களை தருவார்கள்.
வர வேண்டும் வர வேண்டும் தாயேஒரு வரம்
தர வேண்டும் தர வேண்டும் நீயேஅம்பா
(வர வேண்டும் )

அறம் வளர்க்கும் அம்பா பர்வத வர்தனி
ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்தனிதிரு
வையாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி
(வர வேண்டும் )

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயேஇவ்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே
(வர வேண்டும் )
[ பாடல் உதவி "கற்பூர நாயகியே"http://ammanpaattu.blogspot.com/]


சேலம் ஸ்ரீசாரதாம்பாள் கோவிலின் வளையல் தோரணத்தின் படக்காட்சி:

Friday, July 8, 2011

ஸ்ரீவரலஷ்மி விரத பூஜை


ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வருகிற வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவரலஷ்மி விரத பூஜை
செய்யவேண்டும்.இந்த வரலஷ்மி விரத பூஜை செய்தால் அஷ்ட லஷ்மிகளையும் பூஜிப்பதால் ஏற்படும் பலன்கள் சித்திக்கும்

இவ்விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு, தனம், தான்யம், ஆரோக்யம், சம்பத்து, தீர்க்க சௌமாங்கல்யம் யாவும் ஸ்ரீவரல்ஷ்மியின் அருளால் கிடைக்கும்.



பூஜை அனுஷ்டிக்கும் முறை:


குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள், வீட்டின் உள் நிலைப்படி யிலும், பூஜை செய்யும் இடத்திலும், சாணத்தால் மெழுகி மாக்கோலம் இடவேண்டும்





நோன்பிற்கு முதல்தினம் மாலை பூஜை அறையில் மண்டபம் அமைத்து அலங்கரிக்கவேண்டும்.

பிறகு தங்கம்(!), வெள்ளி, தாமிரம் ஏதாவது ஒரு கலசத்தில் பச்சரிசி நிரப்பி அதில் எலிமிச்சை பாக்கு நாணயம் இவைகளை போட்டு
மேலே மாவிலை கொத்து வைத்து, அதன்மேல் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து விடவும்.


மறுதினம் அலங்கரித்த மண்டபத்தில் நுனி வாழை இலை போட்டு,நெல்லை பரப்பி,அதன்மேல் கலசத்தை வைக்கவும்.


அம்மனை அழைக்கும் முறை:



காலை ராகுகாலத்திற்கு முன்பு {சிலர் மாலையில் செய்வர்} உள் நிலைப்படி அருகில் இருந்து அம்மனுக்கு தீபம் காட்டி ,"லஷ்மி ராவே மா இண்டிகி" (லஷ்மீ என் வீ ட்டிற்கு வருவாயாக) என்று பாடியபடி அம்மனை அழைத்து கலசத்தினில் வைத்து நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கவேண்டும்.








பிறகு ஸ்ரீவரலஷ்மி தேவிக்கு பூஜை செய்ய வேண்டும்.

பூஜையினை குருமுகமாக செய்தல் நலம்.











பூஜை முடிந்ததும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தந்து உபசரிக்கவேண்டும்.



சுபம்.

Posted by Picasa

Thursday, July 7, 2011

விதவிதமான கோவில்கள்

Ackshardham Temple, Delhi
Add caption
back to top