Sunday, February 19, 2012

அகட விகடம்

அகட விகடம்:









1.ஆசிரியர்: தேர்வுகளில்  ஏன் பெண்கள் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெருகின்றனர்?

மாணவன்: மதிப்"பெண்கள்" என்றுதான் சொல்லுகிறோம்! மதி "ஆண்கள்" என்று கூறுவதில்லை!

மாணவன்: ஐயா! கல்விக்கதிபதி யார் ஐயா?
ஆசிரியர்: சரஸ்வதி.

மாணவன்:கடவுளும் பெண்ணாக இருப்பதால் தான் பெண்ணுக்குப்பெண் உதவி அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள்
                                    நன்றி-தினமலர்.






அங்கிள், இட்டிலிக்கும் பொங்கலுக்கும் வித்யாசம் என்ன?
நீயே சொல்லேன்; பொங்கலுக்கு லீவு உண்டு, இட்டலிக்கு லீவு கிடையாது!

ஆண்டி, தாலிக்க்யிற்றிர்க்கும் தூக்குக்கயிறுக்கும் வித்தியாசம் என்ன?

நான்: நீயே சொல்லேன்;

கழுத்தில் ஒரு முடிச்சு போட்டால் அது தூக்குக்கயிறு, மூன்று முடிச்சி போட்டால் தாலி!!











எனது கணவர் அகடவிகடமாக பேசுபவர்.


ஒரு சமயம் இருவரும் உண்வு விடுதி [ஒட்டல்] க்குச்சென்றிருந்தோம்இவர் ஒரு சாம்பார் பிரியர்.சர்வரிடம் இவர் 'ஒரு பிளேட் இட்டலி சாம்பார்' , 'ஒரு பிளேட் சாம்பார் இட்டலி' கேட்டார் . சர்வரும் தலையாட்டிவிட்டுச்சென்றவர், திரும்பிவந்து இரண்டும் ஒன்றுதானே எனக் கேட்க, இவர், இட்டலி சாம்பார் என்றால் தொட்டுக் கொள்ள சிறிது சாம்பார் போதும்சாம்பார் இட்டலி' என்றால் பிளேட் நிறைய சாம்பாரும் அதில் இட்டலியும் என்று கூற, சர்வர் திகைத்து நிற்க, அருகில் உள்ளவர்கள் நகைக்க , அந்த இடமே கலகலத்துவிடடது!






                                                                               


















படித்ததில் பிடித்தது :

ஒரு பணக்கார மாமியாருக்கு மூன்று மருமகன்கள். மூவரும் தன் மீது எவ்வளவு பிரியமாக இருக்கிறார்கள் என்பதை அறிய மாமியார் மூத்த மருமகனுடன் ஆற்றில் படகில் செல்லும் போது தவறி விழுவது போல்நீரில் விழுந்தார்
மருமகன் உடன் பாய்ந்து காப்பாற்றினார். மறு நாள் காலை கண்விழித்த மருமகன் வீட்டு வாசலில் ஒரு புதிய காரினைக் கண்டான்.காரின் கண்ணாடியில் ஒரு அட்டை தொங்ககயது. அதில் "மாமியாரின் அன்பளிப்பு" என்று எழுதியிருந்தது!

பிறிதொரு நாள் இரண்டாவது மருமகனுடன் படகுப்பயணத்தில் இதேபோல் விழ, அவனும் உடன் காப்பாற்ற,அவனுக்கும் கிடைத்தது ஒரு கார் மாமியாரின் பரிசாக.
மூன்றாவது மருமகனின் அன்பைச்சொதிக்க, இதேபோல் மாமியார் நீரில் தவறிவிழுவதுபோல் குதிக்க மருமகன் காப்பாற்றவில்லை. நீச்சல் தெரியாத மாமியார் காப்பாற்ற வேண்ட, அவன் "தொலைந்து போ, பெண்ணா வளர்த்திருக்கிறாய்" எனக் கத்திவிட்டு வீடு திரும்ப, மறு நாள் காலை அவன் வீட்டு வாசலிலும் ஒரு புதிய ஃபாரின் கார்! அதில் "மாமனாரின் அன்பு பரிசு" என்றிருந்தது!!







நாங்க நாகர்கோவில் பக்கம் இருந்தபோது பக்கத்துவீட்டில் ஒரு தம்பதியினர்; அந்த அம்மாவுக்கு மூன்று மருமகள்கள்.

ஒருசமயம் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள்,"என் மூத்தமருமகள் சுறுசுறுப்பானவ, அதிகாலை எழுந்து காபி போட்டு பின் என்னை எழுப்புவாள்,
இரண்டாவது மருமகளை எழுப்பினா, அதன்பின் காபி போட்டுத்தருவாள். மூன்றாவது மருமகளை நாந்தான் காபி போட்டு காப்பியுடன் எழுப்பவேண்டும் மற்றபடி தங்கம் என்று விட்டுக்கொடுக்காமல் புன்னகையுடன் கூறுவார்கள்! காலம் அப்படி அகிவிட்டது.








கன்னியாகுமரி  விவேகானந்தர் மண்டபம்


                                                       
                                                          திர்ப்பிரப்பி அருவி 



                                  ஆரல்வாய்மொழி  அருகே மலைக் கணவாய்






                                                                            
                                 ஆரல்வாய் --நாகர்கோவில் {தோவழை பாதை }






ஆரல்வாய்மொழி மலையும்      காற்  றாலை யும்






                                                                    முக்கடல்  சங்கமம்










back to top