Monday, August 20, 2012

நடராஜர் சிலையின் சிறப்பு (1):-





நடராஜர் சிலைகள் பொதுவாக அனைத்துக் கோவில்களிலும் காணலாம். ஆனால் கீழ்க்கண்டஐந்து கோவில்களிலும் உள்ள நடராஜர் சிலைகள் அனைத்தும் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பெற்றது.
இதன் வரலாறு:- சிங்கவர்மன் என்னும் மன்னன் தனது பாவமும் ரோகமும் தீர தில்லை சிவகங்கை குளத்தினில் மூழ்கியதால் குணமாக நடராஜருக்கு ஒரு சிலை வடிக்க எண்ணி நமச்சிவாய முத்து என்ற
ஸ்தபதியால் தாமிரத்தி வடிக்கப் பட்ட சிலை தில்லை நடராஜர் ஆகும்.சிலையின் அழகில் மயங்கிய மன்னன்,அடுத்த சிலையினை தங்கத்தால் உருவாக்கச்செய்தான்.நடராஜர் திருவிளையாடலால் இது செப்புத்திருமேனியாகியது. இதனை "செப்பறை" என்ற ஸ்த்தலத்தினில் அமைத்தான். மேலும் இரண்டு திருமேனியை செய்யப்பணித்து அதனை "கட்டாரி மங்களம்" மற்றும் "கரிசூழ்ந்த மங்களம்" என்ற ஸ்தலங்களில் பிரதிஷ்டை செய்தான்.

இது போல் வேறு திருமேனியை சிற்பி உருவாக்க கூடாது என்ற எண்ணத்தில் சிற்பியின் கையை அரசன் துண்டித்துவிடசிற்பியும் அசராது மரத்தால் ஆன கை செய்து அதன் உதவியால் இதேபோல் பிறிதொரு சிலை செய்து ஐந்தாவது சிலையினை "கருவேலங்குளம்என்ற ஸ்தலத்தினில் பிரதிஷ்டை செய்தான்!
மேற்கண்ட ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜர் சிலைகளும் ஒன்று போல் இருக்கும்.
சிலையின் சிறப்புமேற்கண்ட  ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜர் சிலைகளில் சிதம்பரம் நடராஜர் மட்டும் வீதிஉலா வருவார்அப்போது சிலையின் முன்னால் இருந்து பார்த்தால் நடராஜர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த நிலையில் இருப்பார்பின்புறம் இருந்து பார்த்தால் ஒருகால் தூக்கி ஆடுவது தெரியும்.
                                                        கோனேரி ராஜபுரம்  நடராஜர்



http://images.travelpod.com/users/indianature/28.1281538296.nataraja-konerirajapuram.jpg
                      கோனேரி ராஜபுரம்  நடராஜர்
மேற்கண்ட ஐந்து ஸ்தலங்களில் உள்ள நடராஜரைத்தவிரகோனேரி ராஜபுரம் (கொதிக்கும் உலோகக்கூழை சிவபெருமான் வயோதிகர் உருவில் வந்துஅதனைக்குடித்து நடராஜராக உருமாறியவர்), மற்றும்நெல்லை கீழ்வேளூர்பாத்தூர் சிவபுரம்ஆகிய ஸ்தலங்களில் உள்ள சிலைகளும் சிற்ப சாத்திரப்படி  உன்னதமாக வடிக்கப்பட்டு இருப்பதை கீழ்க்கண்ட முறையினால் அறியலாம்.
  பெருமானுக்கு  தேன் அபிஷேகம் செய்யும் போதுமுகத்தில் வழிந்து,மூக்குநுனி வழியே கரத்தினில் வீழ்ந்துபின் விரலில் வழிந்துதூக்கிய திருவடியின் மேல் விழுந்துஇடது பாதத்தின் பெருவிரல் வழியே கீழே நூல்பிடித்தால் போல் விழவேண்டும்
சிற்ப சாத்திரப்படி உன்னதமாக அமைந்த உருவம் இதுதான்

                          
                        வானூர் நடராஜர்
  

back to top