Tuesday, November 8, 2011

பின்னூட்டதில் போட்ட படங்கள்!






வலைப்பதிவின் புதிய ஆரம்ப பதிவாளரான எனக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்த பல வலைபதிவாளர்களுக்கு எனது பணிவான நன்றி!

குறிப்பாக,
                       http://thulasidhalam.blogspot.com/
                       
                       http://maayaulagam-4u.blogspot.com/

                       http://jaghamani.blogspot.com/

                         http://ethirneechal.blogspot.com/

                     http://bloggernanban.blogspot.com/p/table-of-contents_22.html

ஆகியோருக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

Wednesday, November 2, 2011

மாப்பிள்ளை சொதி!


இது ஒரு உணவு வகை ஆகும். என்ன இது புதுமை என்கிறீர்களா! ஒன்றுமில்லை, எனது ம்ற்றொரு வலைப்பதிவான "தாமரை மதுரையில்" வெளியிட்டுள்ள "பொதிகை--பல் போச்சே" கட்டுரையில் வெளி உலகத்தொடர்பில்லாமல் 3 தினங்கள் எனக் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா? உடன் வந்த சமையல்காரர் புண்ணியத்தால் அறுசுவை உணவுக்கு குறைவில்லை

ஒரு நாள் உணவில் இந்த மாப்பிள்ளை சொதி கட்டாயம் இடம் பெறும்.


மாப்பிள்ளை சொதி செய்யும் முறை:-- தேவையான பொருட்கள்: 1. தேங்காய்-2. 2.சிறு பருப்பு (பாசிப் பருப்பு)-300 GM. 3.உருளை கிழங்ககு, கேரட், பீன்ஸ் , முருங்காய், சி.வெங்காயம் தலா ஒரு கப், பட்டை,லவங்கம், பூண்டுசோம்பு அகியவை சிறிதளவு, இஞ்சி சாறு, எலிமிச்சை சாறு ஒரு டேபில் ஸ்பூன், பச்சை மிளகாய் 8-10, நெய் மற்றும் உப்பு. தேவையான அளவு.








மாப்பிள்ளை சொதி தயாரிக்கும் முறை:

முதலில் பாசிப்பருப்பை வேகவைக்கவும். தேங்காயினை உடைத்து துருவி மிக்சியில் இட்டு அரைத்து பால் எடுக்கவும். இது மிக வும் திக்காக இருக்கும்.பின் திரும்பவும் சிறிது நீர் விட்டு அரைத்து பால் எடுக்கவும் . மீண்டும் நீர் சேர்த்து மூன்றாவது பால் எடுக்கவும். எடுத்த மூன்று பால்களையும் தனித்தனியாக பாத்திரத்தில் வைக்கவும். காய்களை நீளவாக்கில் சற்று பெரிய துண்டுகளாக வறுக்கவும். மிளகாயினை நீளமாக கீறி வைக்கவும்.
அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு, பட்டை, சோம்பு, லவங்கம் போட்டு சிவந்ததும் நறுக்கிய காய்களை போட்டு நன்கு
வதக்கவும்தேவைஆன அளவு உப்பினை சேர்க்கவும்.பின் மூன்றாவது தேங்காய் பால் விட்டு நன்றாக வேகவிடவும். வேகவைத்த பாசிப்பருப்பை சேர்த்து, அத்துடன் இரண்டாவது எடுத்த பால் சேர்த்து லேசாக கொதிக்கவிடவும். அதிகசூட்டில் கொதிக்க வைத்தால் தேங்காய் பால் திரிந்துவிடும். மேல்கொண்டு இஞ்சி சாறினை சேர்க்கவும். பின் முதல் பாலினை சேர்த்து, எலுமிச்சை சாறினை சேர்க்கவும். உடன் அடுப்பில் இருந்து இறக்கவும். தேவையானால் நெய்யில் வறுத்த முந்திரியை சேர்க்கவும்.
இது தான் "மாப்பிள்ளை சொதி". நெல்லை சீமையில் இது மிகவும் பிரசித்தம். புது மாப்பிள்ளை மாமியார் வீட்டிற்கு வரும் போது இதனை கட்டாயம் செய்வதால் "மாப்பிள்ளை சொதி" என்று பெயர். தவறினால், 'என்ன வே ஒரு சொதி செய்து போடலேஎன கேலிப்பேச்சுக்கு ஆளாக நேரிடும்.
அன்புடன்,
back to top