Friday, July 8, 2011

ஸ்ரீவரலஷ்மி விரத பூஜை


ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன்னால் வருகிற வெள்ளிக்கிழமை அன்று ஸ்ரீவரலஷ்மி விரத பூஜை
செய்யவேண்டும்.இந்த வரலஷ்மி விரத பூஜை செய்தால் அஷ்ட லஷ்மிகளையும் பூஜிப்பதால் ஏற்படும் பலன்கள் சித்திக்கும்

இவ்விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு, தனம், தான்யம், ஆரோக்யம், சம்பத்து, தீர்க்க சௌமாங்கல்யம் யாவும் ஸ்ரீவரல்ஷ்மியின் அருளால் கிடைக்கும்.



பூஜை அனுஷ்டிக்கும் முறை:


குறிப்பிட்ட வெள்ளிக்கிழமைக்கு முதல் நாள், வீட்டின் உள் நிலைப்படி யிலும், பூஜை செய்யும் இடத்திலும், சாணத்தால் மெழுகி மாக்கோலம் இடவேண்டும்





நோன்பிற்கு முதல்தினம் மாலை பூஜை அறையில் மண்டபம் அமைத்து அலங்கரிக்கவேண்டும்.

பிறகு தங்கம்(!), வெள்ளி, தாமிரம் ஏதாவது ஒரு கலசத்தில் பச்சரிசி நிரப்பி அதில் எலிமிச்சை பாக்கு நாணயம் இவைகளை போட்டு
மேலே மாவிலை கொத்து வைத்து, அதன்மேல் மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து விடவும்.


மறுதினம் அலங்கரித்த மண்டபத்தில் நுனி வாழை இலை போட்டு,நெல்லை பரப்பி,அதன்மேல் கலசத்தை வைக்கவும்.


அம்மனை அழைக்கும் முறை:



காலை ராகுகாலத்திற்கு முன்பு {சிலர் மாலையில் செய்வர்} உள் நிலைப்படி அருகில் இருந்து அம்மனுக்கு தீபம் காட்டி ,"லஷ்மி ராவே மா இண்டிகி" (லஷ்மீ என் வீ ட்டிற்கு வருவாயாக) என்று பாடியபடி அம்மனை அழைத்து கலசத்தினில் வைத்து நகை மற்றும் மலர்களால் அலங்கரிக்கவேண்டும்.








பிறகு ஸ்ரீவரலஷ்மி தேவிக்கு பூஜை செய்ய வேண்டும்.

பூஜையினை குருமுகமாக செய்தல் நலம்.











பூஜை முடிந்ததும் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் தந்து உபசரிக்கவேண்டும்.



சுபம்.

Posted by Picasa

6 comments:

  1. அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி ராஜராஜேஸ்வரி. தங்கள் அளவிற்கு விளக்கமாக எழுத மேலும் ஊக்கமளித்ததுக்கு மீ ண்டும் நன்றி--பத்மாசூரி

    ReplyDelete
  3. ஊர் வாசம்!

    அதன் சுவையே தனி.

    உங்கள் பதிவைப் பார்க்கும் போது அந்த இழப்பு இன்னும் தூக்கலாய் தெரிகிறது.

    தெய்வீகம் கமழும் வீட்டுக்கு இணையேது?

    ReplyDelete
  4. நன்றி "மணி மேகலா" . தொடர்ந்து ஊக்கப்படுத்துங்க!

    ReplyDelete
  5. வணக்கம் பத்மாசூரி, என் பதிவிர்க்கு வந்து கருத்திட்டதற்க்கு நன்றி.
    வரலக்‌ஷிமி விரத புஜையை பற்றி அழகான படங்களுடன் விளக்கியிருப்பது அருமையாக உள்ளது, நன்றி..

    ReplyDelete

படங்கள் இணைக்க [im]பட url[/im]
ஓடும் எழுத்துக்களுக்கு [ma]....[/ma]
எழுத்தின் அளவை குறிக்க (எண்களை மாற்றலாம்) [si="2"]...[/si]
எழுத்தின் நிறத்தைக் குறிக்க (பெயர்களை மாற்றலாம்) [co="red"]...[/co]
கருத்தை மையத்தில் கொண்டுவர [ce]...[/ce]
வலது புறமாக எழுத்துக்களை ஓடவிட [ma+]...[/ma+]
கருத்தை ஒரு பெட்டிக்குள் போட [box]...[/box]

back to top