இந்தியச் சிற்பக் கலையின் சிறப்பினை வெளிப்படுத்தும் கலைக்
கோவில்களில்,குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை கர்நாடகத்தின் பேலூர் -- ஹளேபீடு ஆலயங்கள்.
மேல் மண்டப சிற்பம் |
பேலூரில் ஸ்ரீ சென்ன கேசவ பெருமாள் கோவிலும் அங்கிருந்து 10 மைல் தொலைவில் உள்ள ஹளே பீடு ஸ்தலத்தில் அற்புதமான கோவில் ஸ்ரீ ஹொய்சாலேஸ்வர ஸ்வாமி திருக்கோவில்.
இங்கே அழகு தரிசனம் தரும் சிற்பங்கள் நம் முன்னோர்களின் கலைச்சிறப்பிற்கும் சான்றாக விளங்குகிறது.
மண்டபம் மேற் பகுதியில்
நடன மாது
ஒரு தூணைப் போல் மற்றொன்று இருக்காது
1.நர்த்தன சரஸ்வதி தூணில் நர்த்தனக் கோலத்தில் அருள்கிறாள் கல்வி நாயகி. நான்கு கைகளைக் கொண்டு நாட்டியமாடும் கலைவாணியை வலப்புற்ம் கோவிலின் பின்புறம் வடக்கு நோக்கி தரிசிக்கலாம்.
மற்றொரு பகுதியில் 10 கரங்கள் கொண்டவளாக சரஸ்வதி தேவி; தேவி அருகே வாத்தியக் கோஷ்டி,சிரசுக்கு மேல மரக்கிளைகள் மற்றும் படர்ந்துள்ள கொடிகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளது..
கஜசம்ஹாரம்
வேழம் உரிக்கும் சிவன்: ஹொய்சாலேஸ்வரர் கோவிலை வலம் வரும் போது, தெற்கு வாசலைத்தாண்டியதும் சிவனின் ஒரு உக்கரத்தாண்டவத்தினைக் காணலாம். யானை உருவில் வரும் அசுரனைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்தியவண்ணம் ஆடும் தாண்டவத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.
சிவனாரின் கைகளில் உடுக்கை,சூலம்,குறுவாள், அசுரனின் சிரம் ஆகியவற்றை ஏந்தி ஆடுகிறார். ஸ்வாமியின் கைவிரல் நகங்கள் யானைத்தோலை உரித்தெடுக்கும் அளவு கூர்மையாக இருப்பதை ஊன்றி கவனியுங்கள்.
தூண்கள்
2. படைப்புக் கடவுள் ப்ரம்மன்.அவர் கலடியில் வெண் சாமரம் வீசும் மங்கைகள்.பீடத்தில் அன்னப்பறவைகள். ஒரு அற்புதமான சிற்பத் தொகுப்பு
பிரம்மா
நரசிம்ஹ அவதாரம்
ஸ்ரீ
கிரிஷ்ணர் கொவர்த்தன
கிரியை ஒரு
விரலில் தூக்கும்
அற்புத காட்சி.
சிவபெருமான்
பிஷ்ஷாடனராக தோற்றம்
அளிக்கும் அழகிய
சிற்பம்.
கருடன்
மேல் வீற்றிருக்கும்
விஷ்ணு
அபிமன்யுவின்
சக்கரவியூகம்
கோவிலின் தென்பகுதி
வேழம் உரிக்கும் சிவன்: ஹொய்சாலேஸ்வரர் கோவிலை வலம் வரும் போது, தெற்கு வாசலைத்தாண்டியதும் சிவனின் ஒரு உக்கரத்தாண்டவத்தினைக் காணலாம். யானை உருவில் வரும் அசுரனைக் கிழித்து, அதன் தோலைப் போர்த்தியவண்ணம் ஆடும் தாண்டவத்தைக் காணக் கண் கோடி வேண்டும்
சிவனாரின் கைகளில் உடுக்கை,சூலம்,குறுவாள், அசுரனின் சிரம் ஆகியவற்றை ஏந்தி ஆடுகிறார். ஸ்வாமியின் கைவிரல் நகங்கள் யானைத்தோலை உரித்தெடுக்கும் அளவு கூர்மையாக இருப்பதை ஊன்றி கவனியுங்கள்.
ஆலயத்தின்
முகப்பில் வினாயகர்.
ஹோய்சால மன்னர்களின் இலச்சினை
விஷ்ணுவின் காலடியில் லஷ்மி
அழகி காலில் தைத்த முள்ளினை எடுக்கும் காட்சி
கோவிலின் உட்பகுதியில் உள்ள அழகிய மண்டபம்
மோகினியின் அழகு கொஞ்சும்
சிலை.
ராகு
கேது சிற்பம்
நரசிம்ம
அவதாரம் அரக்கனின்
குடலை மாலையாக
போட்டிருப்பதைக் காணலாம்
சிவபார்வதியின்
அழகிய சிற்பம்
கல் கதவு
வலம்புரி
வினாயகர்.
வாமனன் மற்றும் உலகளந்த பெருமாள் சிற்பம். அழகிய வாமனனுக்கு அசுரச்சக்கரவர்த்தி மஹாபலி தாரைவார்த்துக் கொடுக்கிறார்.
வராக
அவதாரம்
மண்டபத்தின்
உள்ளே அழகிய
விஷ்ணுவின் அழகிய
தோற்றம்
கருடன்
மேல் வீற்றிருக்கும்
விஷ்ணு
மண்டபத்தின் உள் விஷ்ணுவின் அழகிய சிலை
இந்திரனின்
போர்க்கோலம் [கிருஷ்ணர்
கருடன் மேல்
அமர்ந்து,இந்திரலோகத்தில் உள்ள பாரிஜாத
மரத்தினையும் பாமாவையும்கவர்ந்து செல்லும்
போது இந்திரன்
தடுத்து போர்
புரிகிறார்.
கோவில் மண்டபத்தில் உள்ள கவின் மிகு சிற்ப அற்புதங்கள்
சிலைகள் ஒவ்வொன்றும் பிரமிக்க வைக்கின்றன.
ReplyDeleteமிகச் சிறந்த அழகான பதிவு. பாராட்டுக்கள்.
அனைத்துச் சிலைகளும் மிக நேர்த்தியாக இருப்பினும் நடனமாது, தூண்கள், கஜசம்ஹாரம் போன்றவை மிகவும் ரசிக்கும் வண்ணம் உள்ளன.
ReplyDeleteஒவ்வொன்றையும் வெகுநேரம் கலைக்கண்ணோடு நோக்கினால் பலவிஷய்ங்களை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
கீழிருந்து 2 ஆவது படமான சங்கில் விநாயகர் கலர்ஃபுல்லாக வெகு அழகாக உள்ளது.
ReplyDeleteபத்துக் கரங்களுடன் உள்ள சரஸ்வதி பல்வேறு வாத்யங்களுடன் காட்சிதருவதும் மிக அருமையாகக் கஷ்டப்பட்டுள்ள செதுக்கியுள்ளார்கள்.
ReplyDeleteஎதைப்பாராட்டுவது எதை விடுவது என்றே புரியவில்லை. அனைத்துமே வெகு அருமை.
பேசும் சிலைகளாகக் கொடுத்துள்ள மிக நல்ல அழகிய பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
[im]http://www.desicomments.com/dc1/11/157997/157997.gif[/im]
Delete[box]தங்களின் கருத்துரை, அதனைக் குறிப்பிடும் வழி, மிகவும் உற்சாகமூட்டுகிறது.[/box]
மிக மிக அரிய சிற்ப நுணுக்கங்களை காட்சியாகப் பகிர்ந்து மனம் நிறைந்த அழகிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...
ReplyDeleteதங்களின் "மகளீர் தின" பதிவில் போட்ட படத்தினை மேலே போட்டுள்ளேன்!
Delete[im]http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ytdLFjDFEdM[/im]
[im]http://www.img.justfunonly.com/Ama/2011/Oct/01/Colorful_Passion_Photography_Anja_Germany_5.jpg[/im]
Deleteகவின் மிகு சிற்ப அற்புதங்கள் சிந்தை நிறைத்தன. பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களின் பதிவைப் பார்த்து,அதேபோல முயன்றேன். மிக்க நன்றி
Delete[im]http://img233.imageshack.us/img233/9059/image00238.gif[/im]
[im]http://www.img.justfunonly.com/Ama/2011/Oct/01/Colorful_Passion_Photography_Anja_Germany_5.jpg[/im]
DeleteThis comment has been removed by the author.
Delete[im]https://encrypted-tbn2.google.com/images?q=tbn:ANd9GcRYehcwvSWI50DZoHu5TcV8t0JYhPhIEPrjic0fxxhCUhsOOnn45A[/im]
Deleteமிக்க நன்றி