Wednesday, October 19, 2011

தலையெழுத்தை மங்களகரமாக மாற்றி எழுதிட







                   திருப்பட்டூர்  

பிரம்மன் உலகை படைககும் சக்தி தன்னிடம் உள்ளது எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காதபோது ஈஸ்வரன், பிரம்மன் அகங்காரத்தை அழித்ததால் படைப்புத்தொழில் பாதிக்கப்பட்டது. இதனை உணர்ந்த பிரம்மன் 12 துவாதசி லிங்கங்களை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு மீண்டும் படைப்பாற்றலை வழங்கினார்.அதாவது "என்னை மகிழ்வித்த பிரம்மாவாகிய உன்னை வழிபடுபவர்களின் தலையெழுத்தை நீ மங்களகரமாக மாற்றுவாயாக" என்று வரமருளினார்.



ஈசன் விதி இருப்பின் கூட்டி அருள்க என்று கூறி இங்குள்ள ப்ரம்மன் பத்மாசனத்தில் (தாமரை) வீற்றிருக்கும் காட்சி மிகவும் பிரமிப்பூட்டுவதாகும்.
தியான நிலையில் பிரம்மன் சுமார் ஆறடி உயரம், ஆறரை அடி சுற்றளவில் தனித்துவமாக காட்சி தருகிறார். இவரை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும்




மன நோயாளிகள், பிள்ளைகள் இழப்பு, துர்மரணம், சொத்து இழப்பு போன்றவைகளுக்கு இவரை தரிசனம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
தோஷங்கள் நீங்க இவரை வணங்கினால் "தலையழுத்தை மங்களகரமாக மாற்றி எழுதக்கூடிய நல் பாக்கியத்தினை விதியிருப்பின் விதிகூட்டி அருள்வார். மிகவும் சக்திவாய்ந்தவர். இத்தல அன்னை அருள்மிகு ஸம்பத்கௌரி. பிரம்மனை வழிபடுபவர்களுக்கு சம்பத், செல்வம் வழங்கி அருள்புரிகிறார்




பிரம்மன் சன்னதிக்கு அருகில் 18 சித்தர்களில் ஒருவரான "பதஞ்சலி" முனிவரின் ஜீவ சமாதி உள்ளது. அப்பர் சுந்தரரால் பாடல் பெற்ற  பெருமை உடையது.இங்கள்ள ப்ரமாண்டமான நந்தியை பார்க்க பரவசத்தினைக் கொடுக்கும்



நம்பிக்கையுடன் வழிபட்டால், திருமணத்தடை நிவர்த்தி,புத்திரப்பேறு, மங்களகரமான வாழ்க்கை, சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும்



செல்லும் வழி. திருச்சி--பெரம்பலூர் சாலையில் 30கி.மீ. தொலைவில் சிறுகனூர் என்ற சிற்றூர் அருகில் 4கி.மீ. தொலைவில் உள்ளது.







░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓▓▓░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░▓▓▓▓▓░░░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░

░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░











Thursday, October 13, 2011

50வருடத்திற்கு முன் திருப்பதி !


திருப்பதி  பாலாஜி அபூர்வ ....அபிஷேகம. ....

                                        

                                      
                                                          நன்றி! "U TUBE"

Friday, October 7, 2011

இந்த நிமிடத்தை அனுபவியுங்கள் !



பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள் என்று நாம் வாழும் வாழ்க்கை ஒன்றும் நிழற்படமல்ல. அப்படியே இருந்து விடுவதற்கு. நாட்கள் ஒட ஒட காட்ச்சிகள் மாறும்.இந்தனொடியில் நாம் காணும் நட்பும் பாசமும் கூட மாறும்.எனவே தள்ளிப்போடாமல் இந்த நிமிடத்தை அனுபவியுங்கள்!
                      "CRAZY FROG"

Friday, September 30, 2011

கொலு 2011



                                                                                                  காமதேனு ஒன்றே போதும்

Wednesday, August 17, 2011

வரலஷ்மி 2011


வரலஷ்மி விரதம் மற்றும் பூஜை இவ்வாண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.  பொதுவாக ஆவணி மாதம் வரும் இந்த பூஜை இவ்வாண்டு ஆடி இறுதி வெள்ளிக்கிழமை வந்தது.
பூஜையின் போது எடுக்கப்பட்ட படங்கள் தங்களின் கனிவான பார்வைக்கு:--







































Posted by Picasa

Friday, July 15, 2011

ஆடியும் அம்மனும்

ஆடி பிறந்தாலே திருவிழாக் கோலம் தான்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதரித்தநன்னாள்.ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் திருவிழா மிகவும் விசேஷம்.

உடன் எழுந்தருளி இருக்கும் காமதேனுவுக்கும் வளையல் மாலை சாற்றி அலங்கரித்திருப்பார்கள்.
ஆடி கடைசி வெள்ளியன்று பெண்களுக்கு அந்த வளையல்களை தருவார்கள்.
வர வேண்டும் வர வேண்டும் தாயேஒரு வரம்
தர வேண்டும் தர வேண்டும் நீயேஅம்பா
(வர வேண்டும் )

அறம் வளர்க்கும் அம்பா பர்வத வர்தனி
ஐயாறு தனில் மேவும் தர்மசம் வர்தனிதிரு
வையாறு தனில் மேவும் தர்மசம் வர்தனி
(வர வேண்டும் )

தான் எனும் அகந்தை தலைக்கு ஏறாது
தாழ்ந்த என் நிலையில் தர்மம் மாறாது
வான் புகழ் வள்ளுவன் வகுத்த நன்னெறியினில்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயேஇவ்
வையகம் வாழ்ந்திட வரம் அருள் தாயே
(வர வேண்டும் )
[ பாடல் உதவி "கற்பூர நாயகியே"http://ammanpaattu.blogspot.com/]


சேலம் ஸ்ரீசாரதாம்பாள் கோவிலின் வளையல் தோரணத்தின் படக்காட்சி:
back to top