காற்றேதான் கடவுளடா!
ஒரு நாளில் ஒரு மனிதர்
சுவாசிக்கிற உயிர்காற்று (ஆக்ஸிஜன்) மூன்று பிராணாவாயு சிலிண்டர்களுக்குச் சமமானது.
ஒரு பிராணாவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாய், ஒரு நாளுக்கான தேவை 2,100/-ரூபாய். ஓராண்டுக்கான
இதன் மதிப்பு ரூ,7,66,55/-
சராசரி ஆயுள் 65 ஆண்டுகளுக்குத்
தேவைப்படும் பிராணாவாயுவின் மதிப்பு 5,00,00,000 ரூபாய்! இவ்வளவு மதிப்புமிக்க உயிர்க்காற்று
எங்கிருந்து கிடைக்கிறது?
நம்மைச் சுற்றியுள்ள
மரங்களிடமிருந்துதான்! ஓர் அரசமரம், தன்னைச் சுற்றி அரை கிலோ மீட்டர் பரப்பளவு காற்றை
தூய்மைப்படுத்தி, பிராண வாயுவை தரும் பணியைச் செய்கிறது! இரனால்தானோ என்னவோ, நம் முன்னோர்கள்
இதனை காக்கும் கடவுள் விஷ்ணுவின் அம்சமாகக் கருதினார்கள்.
விருட்ச சாஸ்திர பலன்கள்!
ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம்தானே.
-
இப்பாடல் “கார்த்திகை புராணத்தில் இருக்கிறது.
ஒவ்வொருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்கில பட்சத்தில் ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு,
மூன்று விளாமரம், மூன்று வில்வமரம், மூன்று நெல்லி மரம், பத்து புளிய மரம், ஐந்து மாமரம்,
ஐந்து தென்னை ஆகிய ஒன்பது புண்ணிய மரங்களையும் வைத்து வளர்த்தால் அவருக்கு நரகம் இல்லையாம்.
மரங்கள் தரும் பெரும் பயனை இப்பாடல் எளிய முறையில் விளக்குகிறது.
மரங்கள் வைத்து ‘வனமஹோத்ஸவம்’ கொண்டாட
வேண்டியகாலத்தையும் நமது முன்னோர்கள் குறித்திருக்கிறார்கள்.
நம்மில் மிகச் சிலருக்கே
மரங்களின் மதிப்பு தெரிகிறது. எல்லோருக்குமான விழிப்புணர்வு இப்போது வரப்போகிறது…?
மண்ணை நேசிப்போம்-
ப்ளாஸ்டிக்கை தவிர்ப்போம்!
மரங்களைப் பாதுகாப்போம்-