திருப்பட்டூர்
பிரம்மன் உலகை படைககும் சக்தி தன்னிடம் உள்ளது எனும் அகங்காரத்துடன் ஈசனை மதிக்காதபோது ஈஸ்வரன், பிரம்மன் அகங்காரத்தை அழித்ததால் படைப்புத்தொழில் பாதிக்கப்பட்டது. இதனை உணர்ந்த பிரம்மன் 12 துவாதசி லிங்கங்களை இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிரம்மனின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், அவருக்கு மீண்டும் படைப்பாற்றலை வழங்கினார்.அதாவது "என்னை மகிழ்வித்த பிரம்மாவாகிய உன்னை வழிபடுபவர்களின் தலையெழுத்தை நீ மங்களகரமாக மாற்றுவாயாக" என்று வரமருளினார்.
ஈசன் விதி இருப்பின் கூட்டி அருள்க என்று கூறி இங்குள்ள ப்ரம்மன் பத்மாசனத்தில் (தாமரை) வீற்றிருக்கும் காட்சி மிகவும் பிரமிப்பூட்டுவதாகும்.
தியான நிலையில் பிரம்மன் சுமார் ஆறடி உயரம், ஆறரை அடி சுற்றளவில் தனித்துவமாக காட்சி தருகிறார். இவரை திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பாகும்
மன நோயாளிகள், பிள்ளைகள் இழப்பு, துர்மரணம், சொத்து இழப்பு போன்றவைகளுக்கு இவரை தரிசனம் செய்து வழிபடுவது சிறப்பாகும்.
தோஷங்கள் நீங்க இவரை வணங்கினால் "தலையழுத்தை மங்களகரமாக மாற்றி எழுதக்கூடிய நல் பாக்கியத்தினை விதியிருப்பின் விதிகூட்டி அருள்வார். மிகவும் சக்திவாய்ந்தவர். இத்தல அன்னை அருள்மிகு ஸம்பத்கௌரி. பிரம்மனை வழிபடுபவர்களுக்கு சம்பத், செல்வம் வழங்கி அருள்புரிகிறார்
பிரம்மன் சன்னதிக்கு அருகில் 18 சித்தர்களில் ஒருவரான "பதஞ்சலி" முனிவரின் ஜீவ சமாதி உள்ளது. அப்பர் சுந்தரரால் பாடல் பெற்ற பெருமை உடையது.இங்கள்ள ப்ரமாண்டமான நந்தியை பார்க்க பரவசத்தினைக் கொடுக்கும்
நம்பிக்கையுடன் வழிபட்டால், திருமணத்தடை நிவர்த்தி,புத்திரப்பேறு, மங்களகரமான வாழ்க்கை, சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும்
செல்லும் வழி. திருச்சி--பெரம்பலூர் சாலையில் 30கி.மீ. தொலைவில் சிறுகனூர் என்ற சிற்றூர் அருகில் 4கி.மீ. தொலைவில் உள்ளது.
░░░░░░░░░░░░░░░░░░░▓░░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░░
░░▓▓░░░░▓░▓▓▓▓▓░░▓░░░▓▓░░░░▓▓▓▓▓░░░░░░░
░▓░░▓░░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░░░▓░░▓░░░░░░░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓▓▓▓▓▓▓▓░░░░░░
▓░▓░░▓░░▓░▓░░▓░░░▓░░▓░░▓░▓░░░░▓░░▓░░░░░
░▓░░▓▓▓▓▓░▓░░▓░░░▓▓▓▓▓▓▓░░▓▓▓▓░░▓░░░░░░
░░░░░░░░░░░░░░░░▓░░░▓░░░░░░░░░░░░░░░░░░
░░░░░░░░░░░░░░░░░▓▓▓▓▓▓░░░░░░░░░░░░░░░░